ஆர்.கே நகரில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு? அதிரடி அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் அவரின் ஆர்.கே நகர் தொகுதி காலியானது.

இதையடுடுத்து அந்த தொகுதிக்கு வரும் 12ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிமுக சார்பில் தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷும், ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும் களத்தில் உள்ளனர்.

பா.ஜ.க சார்பில் பிரபல திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் அவர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து ரஜினியின் ஆதரவு கங்கை அமரனுக்கு தான் என பரபரப்பாக பேசப்பட்டது.

இதை மறுக்கும் விதத்தில் என் ஆதரவு வரும் தேர்தலில் யாருக்கும் இல்லை என ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments