சசிகலா புஷ்பா மீது புகார் கொடுத்த இளம்பெண் கடத்தல்? அதிர்ச்சி தகவல்

Report Print Santhan in இந்தியா

அதிமுகவின் முன்னாள் உறுப்பினரும் மாநிலங்களவை எம்பியான சசிகலாபுஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் தெரிவித்த இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு 2016 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தின் ஆனைகுடியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகள் பானுமதியும் அவரது அக்காவுமான ஜான்சிராணியும், தாங்கள் எம்.பி. சசிகலா புஸ்பா வீட்டில் பணிபுரிந்த போது அவர் உட்பட கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதிப் ராஜா ஆகியோர் தங்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதற்கு சசிகலா புஸ்பாவின் தாய் கௌரி உடந்தை என்றும் பொலிசில் புகார் தெரிவித்தனர்.

அதன் பின் இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில்சசிகலா புஷ்பா, அவரது கணவன், தாயார் மற்றும் மகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தனக்கெதிரான எப்ஐஆர்களுக்கு முன் ஜாமீன் பெற்ற சசிகலா புஸ்பா, வழக்கின் விசாரணையின் பொருட்டு புதுக்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஆஜரானார்.

இந்நிலையில், காவல் நிலையத்திற்கு சென்ற ஜான்சிராணி, தன் சகோதரி பானுமதியை காணவில்லை என்றும் யாரோ கடத்திச் சென்று விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்ற பிறகு பானுமதி கடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments