17 வயது பள்ளி மாணவனை கடத்தி சென்ற பெண் ஆசிரியை: அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் 17 வயது பள்ளி மாணவனை கடத்தி சென்ற ஆசிரியை மீது பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது.

இங்கு பதினோராம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவன் ஒருவர் 3 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளார்.

தற்போது மாணவனை அதே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை கடத்தி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியை மீது வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையில், மாணவனை கடத்திய ஆசிரியை வேறொரு பள்ளியில் பணியாற்றிய போது இதேபோன்ற செயலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments