ஜெ. மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்: பி.எச் பாண்டியன் பகீர் தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமானதற்கு காரணம் அவரை கீழே தள்ளிவிட்டது தான் என பி.எச்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். மட்டுமின்றி, ஜெயலலிதா மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை தாங்கள் நெருங்கிவிட்டதாகவும் அவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அப்போலோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கமெராக்களை அகற்ற சொன்னது யார் என பி.ஹெச். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டார் என டிஸ்சார்ஜ் அறிக்கையில் உள்ளது என கூறிய அவர், சிங்கப்பூர் அழைத்து செல்ல விமானம் வந்தபோது வேண்டாம் என சொன்னது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டுமின்றி என்எஸ்ஜி பாதுகாப்பு இல்லாமல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கான விளக்கத்தையும் உடனடியாக மத்திய மாநில அரசுகள் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

மேலும் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த மருத்துவரை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments