கள்ளநோட்டு, பாலியல் தொழில் செய்து சொகுசாக வாழ்ந்த இளம்பெண்: பொலிசார் அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கள்ளநோட்டுகள், பாலியல் தொழில் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் டெல்லியில் தியாகிகள் நினைவு மண்டபத்தின் அருகில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணையும், ஒரு நபரையும் பொலிசார் நேற்று பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த Mubshara என்ற பெண்ணையும் அவர் காதலர் Rakesh Goyalஐயும் கைது செய்துள்ளோம்.

வங்காளம் மற்றும் நேபாளிலிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி இவர்கள் கை மாற்றி விற்றுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இளம் பெண் Mubshara அழகு நிலையத்தில் வேலை பார்த்து கொண்டே பாலியல் தொழிலும் செய்து வந்துள்ளார்.

மேலும், இவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா என தற்போது விசாரித்து வருகிறோம் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments