ஜெயலலிதா கூறிய ரகசியம்: அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சசிகலா எனது வீட்டு வேலைக்காரி மட்டும் தான் என ஜெயலலிதா தங்களிடம் கூறிய ரகசியத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.

பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக உள்ள இவர் திண்டுக்கலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது, எம்ஜிஆர் கட்டிய அதிமுக என்ற பூமாலைக்கு, ஜெயலலிதா அழகு சேர்த்தார். அந்த 'பூ மாலை' இன்று குரங்குகள் கையில் சிக்கி சின்ன பின்னமாகி வருகிறது.

ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் வந்ததற்கு முழுக்காரணமே சசிகலாதான். ஆளுங்கட்சியினர் மிரட்டலுக்கு நாங்கள் பயப்படப்போவதில்லை. விரைவில் சசிகலாவின் பக்கம் இருக்கும் எம்எல்ஏக்கள் பன்னீர் செல்வம் பக்கம் வருவார்கள்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, அமைச்சர்களுடன் பேச்சுவார்தை நடத்திய ஜெயலலிதா, சசிகலா எனது வீட்டு வேலைக்காரி தான். அவளுக்கு அரசியலில் எந்த பதவியும் கொடுக்கமாட்டேன் என எங்களிடம் கூறினார்.

எங்களிடம் கூறியதை ஜெயலலிதா அவர்கள் பேணிக்காத்து வந்தார். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர், சசிகலா அரசியலில் உச்சம் தொட பார்க்கிறார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments