ஜல்லிக்கட்டு போராட்டம்: வைரலாகும் பொலிசாரின் துப்பாக்கிச்சூடு வீடியோ

Report Print Arbin Arbin in இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை பொலிசார் இன்று காலை காட்டுமிராண்டித் தனமாக தாக்கி கலைத்தனர்.

இந்த நிலையில் தற்போது மக்கள் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது, நடு சாலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற வீடியோ ஒன்று பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை, வடபழனியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த வீடியோ குறித்த முழுத்தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments