அப்போதே அவசர சட்டம்.. ஆனாலும் தடை வந்தது எப்படி? முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் தமிழக அரசு பிறப்பித்த ஜல்லிக்கட்டு மீதான அவசரச்சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2014ம் ஆண்டு அவசர சட்டத்திற்கு தடை பிறப்பிக்கப்பட்டது ஏன் என விளக்கம் அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், 2014ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தில் குடியரசு தலைவரின் கையெழுத்து இல்லாமல் போனதாலேயே அப்போது அவசர சட்டத்திற்கு தடை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், இப்போது கொண்டு வந்துள்ள சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்த முறை டெல்லி சென்று அவசர சட்டம் பெற முயன்றதையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபைக் கூட்டத்தில் நினைவு கூர்ந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments