முடிவுக்கு வந்தது மெரீனா போராட்டம்! போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்

Report Print Basu in இந்தியா

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் அடையாளமாக திகழும் மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் கவுதமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, சென்னை மெரினா கடற்கரையில் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஜல்லிக்கட்டு அவசரச்சட்டம் குறித்து நீதிபதி பரந்தாமனும் போராட்டக்காரர்கள் இடையே விளக்கினார்.

தற்போது அவசர சட்டத்தை முழுமையாக மாணவர்களுடன் படித்து பார்த்ததில் திருப்தி அடைந்துள்ளோம். நிரந்தர சட்டம் இயற்றப்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம்.

ஆனால் இதில் எதுவும் பிதற்றும் பட்சத்தில் மீண்டும் போரட்டத்தை தொடர்வோம் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments