முதல்வராகிறார் சசிகலா? தமிழக மக்களிடையே நல்ல பெயர் எடுக்க போட்ட பலே திட்டம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எதிர்வரும் 28ம் திகதி முதல்வராக பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அப்படியே முதல்வராக அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்து மக்களிடம் நல்ல பெயரை பெறவும் திட்டமிட்டுள்ளாராம்.

ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் புரட்சி போராட்டம் நடைபெற்ற நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழக சட்டபேரவையிலும் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி ஜல்லிக்கட்டு நடத்துவது என அலங்காநல்லூர் கிராம சபை முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் 28ம் திகதி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்று, அடுத்த மாதம் 1ம் திகதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments