எனது வீட்டிற்கு வராதீர்கள்..! தமிழர்களை கொச்சைப்படுத்திய ராதா ராஜன் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Jubilee Jubilee in இந்தியா

ஜல்லிக்கட்டுக்காக போராடிய தமிழர்களை கொச்சையான வார்த்தையால் விமர்சனப்படுத்தியதற்காக ராதாராஜன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது, இது முழுவதும் அறவழியில் நடந்தது.

சென்னை மெரீனா கடற்கரையில் வரலாறு காணாத அளவில் மக்கள் அலையென திரண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் இதனை ராதாராஜன் மிகவும் கொச்சையான வார்த்தையால் விமர்சித்தார். 'ஃப்ரிசெக்ஸ் என்று சொன்னால் கூட மெரினாவில் 5000 பேர் கூடுவார்கள்' என அசிங்கமாக பேசி இருந்தார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

மேலும், அவரது வீட்டு முன்பு நேற்று பலர் கூடி தங்கள் எதிர்ப்பைக் காட்ட கோஷங்கள் எழுப்பி வந்தனர். தேதிமுக கட்சியினரும் அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ராதா ராஜன் 'தனது கருத்துகள் தமிழக மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்பதாக’ தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் மனதை காயப்படுத்துவது எனது நோக்கமல்ல என்று கூறிய அவர், எனது வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments