இருவரை குறிவைத்த பொலிசார்! கதறும் பெண்களால் பரபரப்பு

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 6 நாட்களாக அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் இன்று பொலிசார் புகுந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தத் தொடங்கியதும், இருதரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது.

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.

இதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக அஞ்சலி, லிடியா என்ற இருவரையும் பொலிஸார் வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து லத்தியால் தாக்கியுள்ளனர்.

குறித்த பெண்கள் இருவரையும் சிவாரசபுரம் குப்பத்து மக்கள் பொலிஸாரிடம் இருந்து மீட்டு அங்குள்ள ஒரு வீட்டில் அடைக்கலம் கொடுத்ததோடு அந்த பெண்களுக்கு அங்குள்ள மக்கள் உணவும் கொடுத்துள்ளனர்.

அந்த பெண்கள் தங்கி இருந்த வீட்டிற்குள் பொலிசார் அத்துமீறி நுழைந்து அந்தப் பெண்களை மீண்டும் வெளியே இழுத்து வந்துள்ளனர், அந்த வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

காவல்துறையினர் தொடர்ந்து தங்களை குறிவைத்து தாக்கியதாக அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். மீண்டும் அந்தப் பெண்களை காவல்துறையினரிடம் இருந்து மீட்டு பாதுகாப்பு அளித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கீதா அஞ்சலி கூறுகையில், "காவல்துறை எங்களின் முகத்தைப் பார்த்தாலே துரத்தி அடிக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், எங்ககளுடைய முகத்தை நன்றாக பொலிசார் தெரிந்து வைத்திருந்தனர். இதனால், எங்களைக் குறிவைத்து அடிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

லிடியா என்ற பெண் விமான பணிப்பெண் வேலைக்குப் படித்து விட்டு, பணிக்காக் காத்துக் கொண்டிருக்கிறார்.

போராட்டக்களம் வேகமாக வேறு முகத்தை எட்டியிருப்பது, தமிழக காவல்துறைக்கும், அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து, தமிழக அரசு செயல்பட வேண்டும்

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments