மெரீனா போராட்ட களத்தை அதிர வைத்த இளம்பெண் பரபரப்பு பேட்டி

Report Print Jubilee Jubilee in இந்தியா

தமிழ் உணர்வோடு போராட்டத்தில் கோஷமிட்ட தன் மீது அரசியல்சாயம் பூசி முத்திரை குத்தியிருப்பது தனக்கு வருத்தம் தருவதாக அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் பல லட்சம் பேர் திரண்டு அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வித்தியாசமான கோஷங்களை முழங்கி ஆதரவு தெரிவித்து வந்தனர்.

அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் போராட்டமும், வித்தியாசமான கோஷங்களும் அனைவரையும் ஈர்த்தது.

போராட்ட களத்தில் 'சின்னம்மா சின்னம்மா ஒபிஎஸ் எங்கம்மா' என்று கோஷமிட்டு போராடிய அவரது வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், தன் மீது தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், நான் மிக மிக சாதாரணப் பெண். அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தமிழ் உணர்ச்சியோடு, தமிழ்நாட்டுக்காக பேச வந்தேன் . தனி ஆளாக மெரீனா போராட்டத்தில் கலந்து கொண்டேன்.

என் பின்னால் நின்றிருந்த நபர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியாது. அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை. எல்லோரையும் போலத்தான் கோஷமிட்டேன். நான் ஜல்லிக்கட்டுடன் உணர்வுப் பூர்வமாக நெருங்கிய தொடர்பு கொண்டவள். நானும் ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்தான்.

மேலும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அம்மாவைவும், பிரதமர் மோடியையும் நான் திட்டமிட்டு விமர்சிக்கவில்லை. அவமானப்படுத்தும் நோக்கில் நான் விமர்சித்து கோஷமிடவில்லை.

நான் கோஷமிட்ட போது தவறுதலாக தவறான வார்த்தைகள் வந்திருக்கலாம். அது யாரையேனும் வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments