கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல முயன்ற மனைவி: கிராமத்தார் கொடுத்த அதிர்ச்சி பரிசு

Report Print Santhan in இந்தியா
465Shares
465Shares
ibctamil.com

ஆந்திரா மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல முயற்சி செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு(30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகுணா(28). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குரவப்பல்லி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான பொன்னையா என்பவரிடம், சுகுணா சித்தாள் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதையறிந்த பாபு இருவரையும் எச்சரிக்கை செய்ததோடு, கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இதை விட்டபாடில்லை கள்ளத்தொடர்பு தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சுகுணா, பொன்னையா ஆகியோர் பாபுவை தீர்த்து கட்டி விடலாம் என்று முயற்சி செய்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பாபுவை பொன்னையாயும் சுகுணாவும் சேர்ந்து வீட்டில் இருந்த தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாபு குச்சலிட்டுள்ளார். சத்ததை கேட்டு அருகில் இருந்த மக்கள் ஓடி வந்துள்ளனர். இதையறிந்த கள்ளக்காதலர்கள் வீட்டில் மற்றொரு அறையில் பதுங்கினர். அவர்களை மக்கள் வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

அதன் பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments