சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல்: அதிர்ச்சியில் போயஸ் தோட்டம்

Report Print Arbin Arbin in இந்தியா

அதிமுக பிரமுகர் சிஆர் சரஸ்வதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நபர்களை கைது செய்துள்ள பொலிசார் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதியன்று காலமானார். ஜெயலலிதாவின் மறைவையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதேபோல், அதிமுக-வின் பொதுச் செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பொறுப்பேற்றார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதற்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக பிரமுகரும், நடிகையுமான சிஆர் சரஸ்வதிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார், நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

பொலிசார் விசாரணையில் அவர்கள், தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும், பட்டதாரிகளாகவும், இளம் வயதினராகவும் இருந்ததால் பொலிஸார் அவர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments