34 பெண்களை சீரழித்த பொலிசார்: வெளிச்சத்திற்கு வந்த துயர சம்பவம்

Report Print Basu in இந்தியா

இந்தியாவில் 34 பெண்கள் பொலிசாரால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்திலே இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

சத்தீஷ்கரில் மாநில பொலிசார் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை மேற்கொண்டது.

அதில், 34 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், 16 பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருப்பதும் மற்றவர்கள் பாலியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி மாநில அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments