ஸ்டாலின் என்னை போட்டியாக மதிக்கவே மாட்டாரா? கவலைபடும் சசிகலா

Report Print Raju Raju in இந்தியா

அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், சசிகலா அந்த கட்சிக்கு பொதுச் செயலாளராக ஆகியுள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா ஆன பின்னர் பல்வேறு விடயம் சம்மந்தமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ஜல்லிகட்டு விவகாரத்தில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலினை கண்டித்து காட்டமாக அறிக்கை வெளியிட்டார் .

அதற்கு ஸ்டாலின் பதிலறிக்கை விட்டு தன்னை சரிசமமாக பார்ப்பார் என சசிகலா நினைக்க அது பொய்யாகி போனது.

சசிகலாவுக்கு தான் பதிலறிக்கை விடாமல் திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை வைத்து ஸ்டாலின் பதிலளிதார்.

முன்னர் ஜெயலலிதாவை பற்றி பேசிய ஸ்டாலின் தற்போது முதல்வர் பன்னீர் செல்வத்தை பற்றி மட்டும் பேசி வருகிறார்.

சசிகலாவை பற்றியும் அவரின் அறிக்கை பற்றியோ இதுவரை அவர் பேசவில்லை.

இதனால், தமிழகத்தில் முக்கிய சக்தியாக மாற நினைக்கும் தன்னை சரிசமமாக கருதி ஸ்டாலின் அறிக்கை விட மாட்டேன் என்கிறாரே என சசிகலா தரப்பு கவலையடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments