விஜய்- அமலா பால் விவாகரத்திற்கு தனுஷ் காரணமா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Report Print Basu in இந்தியா

இயக்குநர் விஜய்யிடம் விவாகரத்து பெற்றத்ற்கு தனுஷ் காரணம் என புரளி பரவி வந்த நிலையில் நடிகை அமலா பால் விளக்கமளித்துள்ளார்.

இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் சில காலங்களிலேயே அவரை பிரிந்தார். இந்த தம்பதிகளின் பிரிவுக்கு தனுஷ் தான் காரணம் என இணையத்தில் வதந்திகள் கிளம்பின.

இந்நிலையில் இது குறித்து நடிகை அமலா பால் விளக்கமளித்துள்ளார். எங்களுடைய விவாகரத்துக்கு தனுஷ் காரணமல்ல.

இந்த விஷ்யத்தில் தனுஷுக்கு தொடர்பில்லை. தனுஷ் நல்ல நண்பர் அதை தவிர எங்களுக்குள் ஒன்றுமில்லை.

நான் விஜய்யை பிரிந்த போது அவர் வருத்தப்பட்டார். பிரிய வேண்டாம் என்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். இவ்வாறு இருக்கும் போது தனுஷையும் என்னையும் சேர்த்து வைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments