விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் அனுமதித்தால் ரூ.2,000 பரிசு: அரசு அதிரடி அறிவிப்பு

Report Print Peterson Peterson in இந்தியா

சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்து உதவி செய்யும் நபருக்கு ரூ.2000 பரிசு வழங்கப்படும் என டில்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் சாலை விபத்தில் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகளவில் பெருகிக்கொண்டு செல்கிறது.

விபத்துக்களை தடுக்கவும், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றவும் பல்வேறு அரசாங்கங்கள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

எனினும், சில நேரங்களில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற தவறுவதால் அவர்களின் உயிர் பறிபோகும் சம்பங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபரை பாராட்டும் வகையில் ரூ.2000 பரிசு தொகை வழங்கப்படும் என டில்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி முதலமைச்சரான கெஜ்ரிவால் தலைமையில் நடைபெறும் அரசாங்கம் தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுக்குறித்து துணை அமைச்சரான Manish Sisodia வெளியிட்டுள்ள அறிவிப்பில், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றும் நபருக்கு ரூ.2000 மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கம் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

டில்லி அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், பணத்திற்காக ஒருவரின் உயிரை காப்பாற்றும் முனைப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments