அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இந்த தொகுதியில் தான் போட்டி இடுகிறாராம்!

Report Print Arbin Arbin in இந்தியா

அதிமுக பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்பு உள்ளதாக அக்கட்சியினர் கூறிவருகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின்னர், அவரது தோழி சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும் என அமைச்சர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அக்கட்சியின் பொதுக்குழுகூட்டத்தில் ஒருமனதாக சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளராக போட்டியின்றி தெரிவு செய்தனர்.

பலரும் சசிகலா, அதிமுகவின் பொதுச் செயலார் பதவியை ஏற்க வேண்டும் எனக்கூறி வந்த நிலையில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், சசிகலா முதல்வர் பதவியேற்க வேண்டும் என அதிரடி அறிவிப்பினை வெளியிட்டார்.

இதனையடுத்து சசிகலா சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்பு உள்ளதாக கட்சியினர் கூறி வருகிறார்கள்.

அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், 2011ல் நடைபெற்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அமைச்சராக பதவியேற்ற பின்னர் அந்தத்தொகுதிக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

தற்போது அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக வேண்டும் எனக் கூறி வருவதால், சாத்தூர் தொகுதியை செண்டிமென்டாக தெரிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக கட்சியனர் கூறி வருகிறார்கள்.

மேலும் சாத்தூரில் ஆர்.பி.உதயக்குமார் பல நலத்திட்டங்களை செய்துள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் எனவும் கட்சியினர் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments