நானும் ஜெயலலிதாவை போல் சட்டமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டேன்: பிரபல நடிகை

Report Print Santhan in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் இந்த 2016 ஆம் ஆண்டு சினிமா துறையினருக்கு மிக மோசமான ஆண்டாக கழிந்து விட்டது என்று பிரபல நடிகை ரோஜா கூறியுள்ளார்.

பிரபல நடிகையான ரோஜா ஐதரபாத்தில் நடந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஜெயலலிதா குறித்து கூறுகையில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் ஜெயலலிதா.

சட்டமன்றத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட போது, அதை துணிச்சலாக எதிர்கொண்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். இதுவே வேறு பெண்ணாக இருந்திருந்தால் அரசியலே வேண்டாம் என்று ஓடியிருப்பார்.

சாதாரண பெண்கள்தானே இவர்களால் என்ன செய்து விட முடியும், என்று அலட்சியமாக பார்க்கும் ஆண்களுக்கு எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்து விட்டு போய் சென்றிருக்கிறார்.

அவர் சினிமாவில் இருந்து வந்தவர் என்பது பெருமை, அதுமட்டுமின்றி முதலமைச்சரானது அதை விட பெருமை. தானும் ஜெயலலிதாவைப் போல் சட்டமன்றத்தில் இந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். அப்போது எனது மகள் அரசியல் வேண்டாம், ஒன்றும் வேண்டாம், சினிமாவில் சம்பாதித்துக் கொள்ளலாம் என்று கூறினாள்.

அதற்கு நான் அவளிடம், ஜெயலலிதா பட்ட கஷ்டத்தில் 10 சதவீதம் எனக்கு இல்லை. அவர் இது போன்ற கஷ்டங்களைத்தான் தாண்டி தான் உயரத்திற்கு வந்தார். அதை நினைக்கும்போது எனக்கு வருவதெல்லாம் கஷ்டமாக தெரியவில்லை என்று கூறினேன்.

ஜெயலலிதாவைப் போல் அனைவரும் துணிச்சலாக வாழவேண்டும் என்றும் ஜெயலலிதா மறைவால் 2016 ஆம் ஆண்டு சினிமா துறையினருக்கு மோசமான ஆண்டாக கழிந்து இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments