மக்களிடம் நீதி கேட்க செல்கிறார் தீபா

Report Print Deepthi Deepthi in இந்தியா

மக்களிடம் நீதி கேட்கும் பயணம் மேற்கொள்ள தீபா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியில் உள்ள 75 சதவீத தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில், பொதுச்செயலாளரை நியமிக்கவில்லை என்பது தீபாவின் ஆதரவாளர்கள் கருத்து.

சசிகலாவை பொதுச்செயலாளராக தெரிவு செய்ய பொது மக்கள், தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் அதை தீபாவுக்கு சாதகமாக்க அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.

சசிகலாவிடம், கட்சிக்கு சொந்தமான தலைமை அலுவலகம், கொடி, சின்னம் மற்றும் ஆட்சியும் இருக்கலாம். ஆனால் மக்களும், தொண்டர்களும், தீபாவுக்கு ஆதரவாகவே உள்ளனர்.

எனவே, மாவட்டவாரியாக மக்களிடமும், தொண்டர்களிடமும், நீதி கேட்டு பயணம் செல்ல தீபா திட்டமிட்டுள்ளார் என தீபாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயணத்தின் மூலம், மக்களிடம் கிடைக்கும் ஆதரவு, செல்வாக்கு, அனுதாபத்தை தொடர்ந்து புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments