காலில் விழுந்ததால் கோபத்திற்கு ஆளான ஓ.பன்னீர் செல்வம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவின் காலில் ஓ.பன்னீர் செல்வம் விழுந்ததால் பிற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவர் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுவதை அமைச்சர்கள் மட்டுமின்றி அக்கட்சி நிர்வாகிகளும் பின்பற்றி வந்தனர்.

இதனை பிற தமிழக கட்சிகள் கிண்டல் செய்தாலும் அதைப்பற்றி அதிமுகவினர் சிறிதும் கூட கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவின் காலில் பன்னீர் செல்வம் விழுந்துள்ளார்.

ஆனால் இதனை சசிகலா கண்டித்துள்ளார்.

மேலும், அனைவருக்கும் வழிகாட்ட வேண்டிய பன்னீர் செல்வம், முதல்வர் பதவியில் இருப்பதை மறந்து சசிகலாவின் காலில் விழுந்தது அமைச்சர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இவர் இவ்வாறு செய்தால், இவரைத்தொடர்ந்து பிறரும் அதனைப்பின்பற்ற வேண்டிய நிலை வரும், ஆனால் சசிகலா காலில் விழ வேண்டாம் என கூறியதால், இனிமேல் அப்படி ஒரு நிலை இருக்காது என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments