ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிடாததற்கு இது தான் காரணம்? கொந்தளித்து பேசிய வைகோ

Report Print Santhan in இந்தியா

ஜெயலலிதா ஒரு பெண்மணி, அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்களால் மதிக்கப்பட்டவர் அதன் காரணமாகவே புகைப்படத்தை வெளியிடாமல் இருந்திருக்கலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு அவது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழும்புவதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் ஒருவர் தான் கோரி ஜோன்ஸ். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஜெயலலிதாவின் உடலை எடுத்து பிரேத பரிசோதனை கூட நடத்த உத்திரவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து வைகோ கூறுகையில், ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி இப்படி கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் இப்படி ஒரு கருத்தை அவர் தெரிவித்திருக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

இது ஜெயலலிதாவின் மரணத்தை கொச்சைபடுத்துவது போன்று உள்ளது. மேலும் சிலர் ஜெயலலிதா புகைப்படத்தையாவது வெளியிட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவர் ஒரு பெண்மணி, அதுமட்டுமின்றி அரசியல் தலைவர்களால் மதிக்கப்பட்டவர், சிகிச்சை படத்தை வெளியிட்டால் அது நன்றாக இருக்காது என்று கருதி இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments