கனவில் வந்து கணவனின் மனதை கெடுத்த சாமியார்: நிம்மதி இழந்த மனைவி

Report Print Deepthi Deepthi in இந்தியா

பெங்களூரில் மனைவி ஒருவர் தனது கணவர் அனைத்துமே நீல நிறத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்படுவதால் அவருடன் வாழமுடியாது எனக்கூறி விவாகரத்து கோரியுள்ளார்.

விஷால் - நவீனா தம்பதியினருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிவிட்டது.

மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர்கள் இவரும் மாதத்திற்கு 5 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர்.

சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த இவர்களின் வாழ்வில், விஷாலின் மாறுபட்ட வாழ்க்கை முறையால் நவீனாவின் தலையில் இடி வந்து விழுந்தது.

ஆன்மீக வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக்கொண்ட விஷால், தான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஆசிரமங்கள் மற்றும் கோயில்களுக்கு செலவிட ஆரம்பித்தார்.

மேலும், விஷாலின் கனவில் தோன்றிய சாமியார் ஒருவர், உனது வாழ்க்கையில் அனைத்தும் நீல நிறமாக இருந்தால், வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய விஷால், தான் அணியும் ஆடை முதல் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தையும் நீல நிறத்தில் மாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது மனைவி நவீனாவிடமும், நீ பயன்படுத்துத் பொருட்கள் அனைத்தும் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார்.

அலுவலகத்திற்கு நீல நிற சட்டை அணிந்து செல்லும் இவர், வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சாமியார் போன்று மாறிவிடுகிறார்.

வீட்டிற்கு அடிக்கப்பட்ட சுண்ணாம்பு நிறம் நீலம், வீட்டில் பயன்படுத்தும் நாற்காலிகள் நீலம் என அனைத்தையும் நீல நிறமாக மாற்றியுள்ளார்.

கணவனின் இந்த மாறுபட்ட வாழ்க்கை முறையால் நிம்மதி இழந்த நவீனா, இனிமேல் தன் கணவனோடு வாழமுடியாது என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை விசாரித்த பொலிசார், விஷாலை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளனர்.

ஆனால் விஷால் தனது ஆன்மீக வாழ்க்கையை விட்டு வெளிவரமாட்டேன் என கூறிவிட்டதால், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments