சி.ஆர்.சரஸ்வதி மீது வழக்கு பதிவு?

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாவில் மரணம் இருப்பதாக சமீபத்தில் நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளது அதிமுக தொண்டர்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துவிட்டது, நான் சொல்வது நீதிமன்ற அவமதிப்பாககூட இருக்கலாம், இருந்தாலும் நீதிபதியின் இந்த கருத்தை ஏற்க முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

இவரின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் பி.ரத்தினம், உயர்நீதிமன்றத்தில் எந்த வழக்கு விசாரணைக்கு வந்தாலும் 2 நீதிபதி, 3 நீதிபதி அமர்வு முன்பு வக்கீல் வாதம் நடைபெறும்.

அப்போது சம்பந்தப்பட்ட வக்கீல்கள் தங்களது கருத்துகளை தெரிவிப்பார்கள், அப்போது தான் வழக்கில் தெளிவு கிடைக்கும்.

நீதிபதியின் கருத்தை விமர்சித்து சி.ஆர்.சரஸ்வதி பேசியிருப்பது அப்பட்டமான மிரட்டலாகும், நீதிபதி வைத்தியநாதன் நூறு சதவிகிதம் நியாயமான கருத்து.

இது நீதிமன்ற அவமதிப்பாக இருக்கலாம் என தெரிந்து கொண்டே தான் சி.ஆர்.சரஸ்வதி பேசியுள்ளார், எனவே தெரிந்தே அவர் இவ்வாறு கூறுகிறார் என்றால் நீதிமன்றத்துக்கே சவால் விடுகிறார் என்று தான் அர்த்தம்.

நீதிபதியை மிரட்டுவது என்பது நீதித்துறையையே மிரட்டுவது போலாகும், இதற்கான பரிகாரத்தை அந்த கட்சி தான் தேட வேண்டும்.

இதுதொடர்பாக அதிமுக மீதும், சி.ஆர்.சரஸ்வதி மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம், நீதிபதியே முன்வந்து வழக்கு தொடரலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments