தோழி கண்முன்னே நடந்த கொடூரம்! துடிதுடிக்க ரத்த வெள்ளத்தில் பலியான பரிதாபம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டின் திருவாரூர் சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் கல்லூரி மாணவி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரின் குழுந்தான்குளம் பனகல்சாலையை சேர்ந்தவர் மூர்த்தி, இவருடைய மகள் கீர்த்திகா அரசு கல்லூரியில் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும், இவருடைய தோழியான கார்த்திகாவும் கம்ப்யூட்டர் சென்டரில் படித்து வருகின்றனர், இதற்காக தினமும் காலையில் 8.30 மணிக்கு செல்வது வழக்கம்.

சம்பவதினத்தன்று கம்ப்யூட்டர் சென்டரை விட்டு வெளியே வந்துள்ளனர், அப்போது கீர்த்திகா நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த தஞ்சை அரசு பஸ் கீர்த்திகாவின் தலை மீது ஏறியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை பார்த்த கார்த்திகா கதறி அழுதுள்ளார், தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments