முதலமைச்சருக்கான தகுதிகள் சின்னம்மாவிடம் இருக்கிறது! அப்சரா ரெட்டி ஓபன் டாக்

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அவரின் இடத்தை நிரப்ப வந்துவிட்டார் சசிகலா நடராஜன்.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா நடராஜன், அவரை உடனிருந்து பார்த்துக் கொண்டவர்.

சசிகலாவை சின்னம்மா என மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் அழைத்தாலும் அடிமட்ட தொண்டர்களால் ஏனோ ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

இந்நிலையில் அப்சரா ரெட்டி பிரபல இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட போது உடனிருந்து பார்த்துக் கொண்டவர் சின்னம்மா தான்.

32 வருடங்களாக அவருடன் இருந்தவர், அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தவர், ஒரு தாய் தன்னுடைய பிள்ளையை எவ்வாறு கவனித்துக் கொள்வார்களோ அதைப்போலத்தான் சின்னம்மா அம்மாவை கவனித்துக் கொண்டார்.

மிக இனிமையாக பேசக்கூடியவர், என்னுடைய கேள்விகளுக்கு எவ்வித தயக்கமும் இன்றி உண்மைகளை கூறினார்.

ஒருவர் தலைவர் பதவிக்கு வந்தால் மட்டுமே அவர் சிறந்த தலைவராக இருப்பாரா என்பதை நிரூபிக்க முடியும், முதலமைச்சருக்கு தேவையான தகுதிகள் சின்னம்மாவிடம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments