ஜெயலலிதாவுக்கு வழங்கினால் நோபல் பரிசுக்கே பெருமை! சொல்வது அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும், அதற்கான சட்டதிட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்கினால் அது அந்த பரிசுக்கே கிடைத்த பெருமை, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படாது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்று தான்.

பரிசு வழங்கும் நாடுகள் அதற்கான சட்டதிட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments