ஆபாச பதிவு செய்தவருக்கு இளம்பெண்ணின் திடுக் தண்டனை

Report Print Fathima Fathima in இந்தியா

சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி ஆபாசமாக எழுதிய கேரளா அரசியல்வாதியை மன்னிப்பு கேட்க வைத்ததோடு, தவறுக்கு தண்டனையாக அவரை ஆதரவற்றோர் காப்பகத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுக்க வைத்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்.

உங்களுக்கு ஒரு போன் வருகிறது. மிக மோசமான பேச்சுடன் துவங்குகிறது அந்த உரையாடல். பாலியல் தொழிலாளியைப் போல் சித்தரித்து உங்களுக்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தால் என்ன செய்வீர்கள்.

சொல்ல முடியாத மன ரீதியான அழுத்தத்துக்கு உள்ளாவீர்கள். அதே தான் கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஶ்ரீலட்சுமி என்பவருக்கு ஏற்பட்டது. ஆனால் உட்கார்ந்து அழுது கொண்டிருக்காமல், புத்திசாலித்தனத்தோடு இயங்கி அதில் இருந்து வெளியே வந்துள்ளார் அவர்.

அண்மையில் ஶ்ரீலட்சுமிக்கு ஒரு அழைப்பு வந்தது. பாலியல் தொழிலாளியைப்போல சித்தரிக்கப்பட்டிருந்தது அந்த கேள்விகள். அதிர்ந்து போன ஶ்ரீலட்சுமி, அந்த அழைப்பை துண்டித்தார். ஆனால் அது முற்று பெறவில்லை.

தொடர்ச்சியாக அவருக்கு அதுபோன்ற அழைப்புகள் வரத்துவங்கியது. என்ன செய்வது எனத்தெரியாமல் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்தார். ஆனால் அதோடு அவர் அழுது உட்காரவில்லை.

எல்லோருடைய கேள்வியும் ஒரே மாதிரியே இருந்ததால், எப்படி இது நடந்தது என யோசிக்கத் துவங்கினார். தனக்கு வந்த ஒரு எண்ணுக்கு அழைத்து பேசினார். தான் கல்வி ஆலோசகர் என்றும், பல கல்விநிறுவனங்களில் தொடர்ந்து புத்துணர்வு முகாம்களையும் நடத்தி வருவதையும் சொல்லி, தன்னை பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினார்.

அந்த நபர் ஶ்ரீலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டார். "உங்களைப்பற்றி எனக்கு தெரியாது. வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் பாலியல் தொழிலாளி என அடையாளப்படுத்தப்பட்டு உங்கள் எண் குறிப்பிடப்பட்டிருந்தது" என மன்னிப்புக்கேட்ட அவர், ஶ்ரீலட்சுமியின் எண்ணை ஷேர் செய்தவரின் விவரத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினார்.

ஶ்ரீவித்யாவின் எண்ணை சமூக வலைதளங்களில் இப்படி ஷேர் செய்தவர், தேசிய கட்சி ஒன்றின் இளைஞர் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி என்பது தெரியவந்தது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஶ்ரீலட்சுமி முயற்சி எடுத்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அந்த தேசிய கட்சி நிர்வாகிகள், "ஶ்ரீலட்சுமியை சந்தித்து, பிரச்னையை பேசித்தீர்த்துக்கொள்ளலாம். அவரை கட்சியில் இருந்து நீக்கி விடுகிறோம். நடவடிக்கை எடுக்கிறோம். புகார் எதுவும் கொடுக்க வேண்டாம்," என கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அவர் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்த நபர் மீது போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்தார் ஶ்ரீலட்சுமி. அப்போது ஶ்ரீலட்சுமியை அந்த நபரின் வயது முதிர்ந்த பெற்றோர்கள் சந்தித்து மன்னிப்பு கேட்டனர்.

அப்போது உங்கள் மகன் ஏதாவது ஒரு மக்கள் அறக்கட்டளைக்கு ரூ.25 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி, அதன் ரசீதை கொடுத்தால் போலீஸில் புகார் கொடுக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபரின் பேரில் ஆதரவற்ற இல்லம் ஒன்றுக்கு உணவுக்காக ரூ.25 ஆயிரத்தை நன்கொடையாக கொடுத்ததையடுத்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவில்லை. அதே சூழலில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் பெயரை குறிப்பிடாமல் பேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை போட்டார்.

அதில் அறக்கட்டளைக்கு 25 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்ட ரசீதையும் இணைத்திருந்தார். அதில் அந்த நபரின் பெயர் மட்டும் மறைக்கப்பட்டிருந்தது.

- Vikatan

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments