நடு ரோட்டில் மகளை கட்டி வைத்து கொடுமை செய்த தாய்: கண்ணீர் வர வைக்கும் காரணம்!

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை நடு ரோட்டில் கட்டி வைத்து கொடுமை செய்த தாயாரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு பியூலா என்ற மகள் ஒருவர் இருந்துள்ளார்.

திருமணமான பியூலாவை அவரது கணவர் விட்டுச்சென்றுவிட்டதால் அவர் மன பாதிப்புக்குள்ளாகியுள்ளார். இதற்கிடையில் அவருக்கு அழகான குழந்தை ஒன்று பிறந்துள்ளது, ஆனால் அது உடனடியாக இறந்து விட்டது.

இதனால் அவர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினார். கைவிடப்பட்ட கணவன், பிறந்த குழந்தை இறந்தது என்று அவரால் தாங்க முடியவில்லை.

இதனால் பெரிதும் மனகுழப்பத்திற்கு ஆளான அவர், அங்கிருந்த அனைவரிடமும் சற்று ஆக்ரோசமாக நடந்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த வழியாக செல்லும் அனைவரையும் கல்லைக் கொண்டு தாக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்டவராகவே ஆகிவிட்டார்.

இந்நிலையில் இவர் கடந்த இரண்டு மாதங்களாகவே மிகவும் மோசமாக நடந்துள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கல்லால் கொண்டு தாக்கியுள்ளார். பொறுமை இழந்த அருகில் இருந்த மக்கள் அவர்களை வீட்டை விட்டு காலி செய்யும் படி கூறியுள்ளனர்.

வீட்டு உரிமையாளரும் அவர்களை வீட்டை விட்டு காலி செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். இதன் காரணமாகவே அவளை நடு ரோட்டில் கட்டி போட்டு வைத்ததாகவும், சாதரணமாக இருந்தால் அவள் யாரையாவது தாக்கிவிடுவாள் என்பதற்காகவே இது போன்று செய்ததாகவும் அவர் தாயார் கூறியுள்ளார்.

இதை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைத்து வந்து விசாரணை செய்துள்ளனர். அதன் பின்னர் பியூலா அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை மேற்கொள்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments