இன்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் கூட்டத்தில் அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சசிகலாவிடம் ஒப்படைப்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் போயஸ் கார்டன் வழங்கியுள்ளார். இந்த பொறுப்பினை சசிகலாவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதில் சுவாசியமான விடயம் என்னவென்றால், விழா நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்ட அம்மா பேனர்கள் உடனடியாக சசிகலா பேனராக மாற்றப்பட்டது.
இந்த பேனரில் அவருக்கு ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பது போன்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது, பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்கவிருக்கிறார் என்பதையும் இதற்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதை தான் இந்த பேனர் குறிக்கிறது.