ஜெயலலிதாவின் லட்சியம் பழிக்குமா?

Report Print Aravinth in இந்தியா

அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் முறையாக ஜெயலலிதா இல்லாமல் இன்று கூடும் நிலையில், அவரது லட்சியம் நிறைவேற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகமே பரபரப்பான நிலையில் மிகவும் எதிர்பார்க்ககூடிய அளவில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு, முதல் முறையாக அவர் இல்லாமல் கூடும் பொதுக்குழு இதுவாகும்.

மேலும், இந்த பொதுக் குழுவில் ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவி அவருக்கு பின் யாருக்கு செல்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியும் என்று தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஜெயலலிதாவின் லட்சியமான, அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்.

எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று கம்பீரமாக, பேசியதை காப்பாற்றும் வகையில் இருக்குமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் உரையில், விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். எங்களை பொறுத்தவரை எந்த சுயநலமும் இல்லை.

பொது நலம்தான், மக்கள் நலம்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்.

மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியை கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். என்று ஆனித் தரமாக பேசியுள்ளார்.

ஆனால், ஜெயலலிதா இறந்த சில திங்களிலேயே அதிமுக கட்சியின் நிலைமையை பார்த்தால் எங்கு அவரின் லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்ற அச்சம் அதிமுக தொண்டர்களிடத்தில் ஏற்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பொதுக் குழுவில் கம்பீரமாக உரையாற்றிய ஜெயலலிதா இன்று இல்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு பொதுக்குழுவில் ஜெயலலிதா ஆற்றிய முந்தைய உரைகளின் வீடியோ தொகுப்பு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments