இவர் தான் முதலிடம்! கோஹ்லி, டோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Jubilee Jubilee in இந்தியா
460Shares

இந்திய சினிமா நடிகர்கள், நடிகைகள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் என பல துறையிலும் உள்ள 100 பேரின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.

அதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.270.33 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த ஷாரூக் கான் ரூ.221.75 கோடி சொத்து மதிப்புடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ரூ.134.44 கோடி சொத்து மதிப்புடன் 3வது இடத்தில் உள்ளார். அவரது வருமானம் முந்தைய ஆண்டுகளைவி ட பன்மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.203 கோடி சொத்து மதிப்புடன் 4வது இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி ரூ.122.48 கோடி சொத்து மதிப்புடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments