ஜப்பானில் இறந்தவரின் உடல் இந்தியா வருகை: சோகத்தில் மூழ்கிய குடும்பம்

Report Print Jubilee Jubilee in இந்தியா
412Shares

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் தீவிர முயற்சியால் ஜப்பானில் இறந்தவரின் உடல் இந்தியாவுக்கு இன்று கொண்டுவரப்பட உள்ளது.

டெல்லியை சேர்ந்த கோபால் ராம் (48) தனது பெரிய குடும்பத்தை காப்பாற்ற ஒரு ஏஜென்ட் மூலம் சமையல் வேலைக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜப்பான் நாட்டுக்கு சென்றார்.

இதற்காக அவர் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவழித்திருந்தார். ஆனால் அவருக்கு அங்கு கூலிவேலை தான் கிடைத்துள்ளது.

அங்கு சம்பளமும் ஒழுங்காக கிடைக்காததால் அவர் பல இடங்களில் மாறி மாறி கடைசியில் ஒரு ஹொட்டலில் சமையல் வேலையில் சேர்ந்துள்ளார்.

அந்த வேலையிலும் ஆறு மாதத்துக்கு பிறகு தான் ஊதியம் கிடைத்தது. இந்த நிலையில் அந்தப் பணத்தையும் அவருடைய நண்பர் கைபதிலாக வாங்கி, சூதாட்டத்தில் தோற்று விட்டார்.

இந்த நிலையில் தனது குடும்பத்துக்கு பணம் அனுப்ப முடியல்லையே என்ற வேதனையிலும், பணிச்சுமையாலும் கடந்த 10ம் திகதி கோபால் ராம் மாரடைப்பால் இறந்து போனார்.

மிகவும் வறுமையான சூழ்நிலையில் உள்ள அவரது குடும்பம் இந்த தகவலை கேட்டு சோகத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில் அவரது மனைவி ராதா தேவி கணவரின் உடலை ஜப்பானில் இருந்து தாய்நாட்டுக்கு கொண்டுவர டெல்லியில் உள்ள பெண்கள் நலத்துறை ஆணையத்தின் உதவியை நாடினார்.

இதையடுத்து, ஜப்பானில் இருந்து கோபால் ராமின் உடலை மத்திய அரசின் செலவில் கொண்டுவர சுஷ்மா சுவராஜ் ஏற்பாடு செய்தார்.

இதன்படி அவரது உடல் இன்று டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படவுள்ளது. இந்த தகவலை சுஷ்மாவும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments