பெண் பொலிஸ் மீது ஆசிட் வீச்சு! பயந்து ஒதுங்கிய மக்கள்.. பின்னணி காரணம் என்ன?

Report Print Basu in இந்தியா
534Shares

தமிழகத்தில் பெண் பொலிஸ் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் நகரத்திலே இக்கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் லாவண்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தன்று பணி முடிந்து இரவு லாவண்யா வீட்டுக்கு செல்லும் வழியில் மர்ம நபர் ஒருவர் அவர் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

வலியால் அலறி துடித்த லாவண்யாவை பார்த்து பொதுமக்கள் பயந்து ஒதுங்கியுள்ளனர்.

பின்னர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போது லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆசிட் வீசிய நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை

பொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments