மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் ஒன்று திரண்டு வந்த பிரபலங்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவின் பூத உடல் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது, இவரது சமாதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மெரினாவில் அஞ்சலி செலுத்தினர்.