பிரபல நடிகரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை! இதுதான் காரணமா?

Report Print Aravinth in இந்தியா
5322Shares

பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஐபர்தஸ்த் என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பொட்டி ரமேஷ்.

நகைச்சுவை நடிகரான இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி திரிபுரம்பிகா(22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், திரிபுரம்பிகா கடந்த 19 ஆம் திகதி இரவு விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை வீட்டு ஜன்னல் வழியாக பார்த்த ரமேஷின் சகோதரி கதறி அழ, உடனே குடும்பத்தினர் வந்து கதவை உடைத்து காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அங்கு திரிபுரம்பிகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெர்வித்துள்ளார்.

இதற்கிடையில் ஹைதராபாத்தில் ஷீட்டிங்கில் இருந்த ரமேஷுக்கு மனைவி இறந்த தகவல் தெரியவர உடனடியாக விசாகப்படினம் வந்தவர் மனைவியைப் பார்த்து கதறி அழுதக் காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், திரிபுரம்பிகாவின் பெற்றோர் தங்கள் மகளை ரமேஷ் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்ததால் இவ்வாறான அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments