ரிலாக்ஸ் ப்ளீஸ்! கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றேன்- இந்த கடிதத்தை மட்டும் படிங்க

Report Print Raju Raju in இந்தியா
418Shares

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதிலிருந்தே பணத்துக்காக மக்கள் திண்டாடி வருகின்றனர்.

இதோடு வங்கியில் பணம் போடும் விடயத்திலும், எடுக்கும் விடயத்திலும் கடுமையான அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அதன்படி, வங்கியில் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலுத்த முடியும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில், ஒரு நபர் வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஹரிகுமார் என பெயருடன் இருக்கும் அந்த கடிதத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சண்டை போட்ட என் மனைவி அவள் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள்.

இன்று எனக்கு போன் செய்த அவள், அரிசி பானையில் 5000 ரூபாய் வைத்துள்ளதாகவும் அதை வங்கியில் டெப்பாசிட் செய்யும் படியும் கூறியுள்ளார்.

கற்பூரம் அனைத்து சத்தியம் செய்வேன் இது நான் உழைத்து சேர்த்த பணம். இதை தயவு செய்து ஏற்றுகொள்ள வேண்டும் என எழுதியுள்ளார்.

இந்த கடிதமானது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments