சசிகலா காலில் அமைச்சர்கள் விழ 5000 கோடி தான் காரணம்: உண்மைகள் அம்பலமானது

Report Print Santhan in இந்தியா
1180Shares

முக்கிய அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் என பலரும் சசிகலாவை சென்று பார்ப்பதற்கு அவரிடம் அதிக அளவு பணம் உள்ளதாக அறப்போர் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

ஒரு பக்கம் பொதுச் செயலாளராக சசிகலா வர வேண்டும் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வலியுறுத்துகின்றனர்.

மற்றொரு புறம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தான் அடுத்த ஜெயலலிதா என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா குறித்து அறப்போர் என்னும் அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU என்ற பெயரில் ஆய்வுப் படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 43 நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை அதில் இணைத்துள்ளனர்.

மேலும் தற்போது வரை இருக்கும் நிலை பார்த்தால் சுமார் 5000 கோடி வரை அதன் சொத்து மதிப்பு வரும் என்றும் அதன் காரணமாகவே அனைவரும் அவரிடம் செல்வதாகவும், யாரையும் விலைவாங்கும் அளவிற்கு அவரிடம் பணம் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments