இடம் மாறும் ஜெயலலிதா சமாதி? தோண்டி எடுக்கப்படும் உடல்? அதிர்ச்சி தரும் காரணம்

Report Print Santhan in இந்தியா
5365Shares

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கும் உரிய அனுமதி பெறவில்லை என்பதால் அவரது சமாதி வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார். அவர் காலமானதைத் தொடர்ந்து மறுநாள் அவரது பூத உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் சமாதி இடம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அதிமுக-வின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்ட பின்னர் அங்கு சமாதி எழுப்பவோ, கட்டிடம் எழுப்பவோ, சீரமைப்பு பணிகள் செய்யவோ யாருக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த கடலோரப்பகுதி C.R.2 எனும் பகுதியின் கீழ் வருவதாகவும், இந்த பகுதி வளர்ச்சியடைந்த பகுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் ஏதாவது சீரமைப்பு பணியோ, கட்டமைப்பு பணியோ மேற்கொள்ள வேண்டுமானால், முன்னரே மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என கூறப்படுகிறது.

இது குறித்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் கூறியதாக வெளியான தகவல்கள்,

எம்ஜிஆர் சமாதி இடம் பெற்றுள்ள பகுதியில் சமாதியோ, மணி மண்டபமோ, சீரமைப்போ செய்ய வேண்டுமானால் மத்திய அரசிடம் பார்ம் 1 மூலமாக அனுமதி வாங்க வேண்டும்.

இந்த அனுமதியை வாங்குவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ஜெயலலிதா இறந்த அடுத்த நாளே மெரினாவில் கொண்டு போய் அடக்கம் செய்துவிட்டார்கள்.

இதனால் ஜெயலலிதா உடலைத் தோண்டி எடுத்து வேறு இடத்தில் சமாதி அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட வாய்ப்பு இருக்கிறது என பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments