சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல்

Report Print Aravinth in இந்தியா
564Shares

நடிகர் ரஜினிகாந்த் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது காதல் கணவர் அஸ்வினிடம் விவாகரத்து பெற்று தருமாறு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா.

முன்னணி இயக்குநரான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவரை காதலித்து மணம் புரிந்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு வேத் என்ற ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இவர்களை சேர்த்து வைக்க ரஜினிகாந்த் பெரும் பாடுபட்டதில், அஸ்வின் தான் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தும், சௌந்தர்யா வேண்டாம் என்று மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி சௌந்தர்யா சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments