தமிழகத்தின் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன்ராவின் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று இவரை பதவிநீக்கம் செய்ததுடன், கிரிஜா வைத்தியநாதன் ஐஏஎஸ் அவர்கள் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் எஸ்.வி.சேகரின் உறவினர் என்றும் மத்திய அரசின் தலையீட்டின் பேரிலே நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் அளித்துள்ள பேட்டியில், கிரிஜா வைத்தியநாதன் என்னுடைய தம்பியின் மனைவி, அவளுடைய திறமைக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் கிடைத்த அங்கீகாரம்.
என்னுடைய குடும்பத்தில் ஒருவர் தலைமை செயலாளர் என்பது பெருமையான விஷயம், எங்கள் குடும்பத்தில் ஒருத்தரும் சிபாரிசை பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார்.