மகளை அடைய நினைப்பதா? கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண்

Report Print Aravinth in இந்தியா
605Shares

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் தனது மகளை அடைய நினைத்த கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அருகேயுள்ள மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேலு (வயது 45).

மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த முனியம்மாள்(54) என்பவருடன் நீண்ட காலமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் முனியம்மாளின் மகள் துர்காதேவியை தன் ஆசைக்கு இணங்க வைக்க நினைத்துள்ளார்.

இதுகுறித்து முனியம்மாளிடம் கூறியதில் இருவருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தன் மகளின் வாழ்க்கை போய்விடுமோ மிகுந்த ஆத்திரம் கொண்ட முனியம்மாள் ஜெயவேலுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.

இதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் திகதி ஜெயவேலுவை, முனியம்மாள் அந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருடன் சேர்ந்து முனியம்மாள், ஜெயவேலுவை சரமாரியாக கட்டையால் தாக்கி கழுத்தை நெறித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர்.

இதையறிந்த கே.வி குப்பம் பொலிசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு, வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில், தற்போது, இந்த வழக்கில் ஜெயவேலுவை கொலை செய்த முனியம்மாள் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், கொலைக்கு உடந்தையாக இருந்த முனியம்மாள் மகள் துர்காதேவிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி லதா தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, 3 பேரும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments