கருணாநிதியின் உடல்நிலை: நடிகர் விஷாலின் வேண்டுகோள் இதுதான்

Report Print Jubilee Jubilee in இந்தியா

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகர்கள் விஷால், வடிவேலு காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி தொண்டை மற்றும் நுரையிரல் நோய்த்தொற்றால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு கருணாநிதியை பார்க்க வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர்கள் விஷால், வடிவேலு ஆகியோர் கருணாநிதியை பார்ப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றனர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு பேசிய நடிகர் விஷால், இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல்வாதி கருணாநிதி. அவர் தற்போது அவர் முதுமை காரணமாக உடல் உபாதை ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார், தேவையில்லாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments