மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் வாழ்க்கைப் வரலாறு படமானால் எப்படி இருக்கும் என ரம்யா கிருஷ்ணனின் புகைப்படத்துடன் ஒரு போஸ்டர் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இதைப் பார்த்த ரம்யா கிருஷ்ணன் கூறுகையில், என் கனவு கதாபாத்திரம் எது என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் பல முறை கேட்டுள்ளனர்.
ஆனால் அப்போது என்னிடம் பதில் இல்லை. தற்போது சொல்கிறேன் புரட்சித் தலைவி ஜெயலலிதாவாக நடிப்பதே என் கனவு கதாபாத்திரம்.
அம்மா என்னை போன்று லட்சக்கணக்கான பெண்களின் முன்மாதிரி. அப்படிப்பட்டவரை போன்று நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு கிடைக்கும் கவுரவம்.
ஜெயலலிதாவாக நடிப்பது சவாலானது தான் என்றாலும் நல்ல கதையுடன் இயக்குனர் யாராவது அணுகினால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
.@meramyakrishnan What do you think about this? @karthiksubbaraj #whatifthesebiopicswereactuallymade pic.twitter.com/Hlm4yn98T7
— FullyFilmy (@FullyFilmy_in) December 16, 2016