கண்டிப்பாக இது உங்களை கலங்க வைக்கும்! வைரலான மனதை உருக வைக்கும் புகைப்படம்

Report Print Jubilee Jubilee in இந்தியா

சமூகவலைதளங்களில் வைராகி வரும் ஒரு புகைப்படம் பார்ப்போரை எல்லாம் கலங்க வைத்துள்ளது.

மத்திய அரசின் பழைய 500, 1000 ரூபாய் ஒழிப்பு திட்டத்தால் இந்திய மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக அடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் சரியாக மக்களுக்கு கிடைக்காததால் அவர்கள் திண்டாடி வருகின்றனர்.

பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமல் ஏடிஎம் மற்றும் வங்கி என எப்போதும் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.

ஓய்வு ஊதியம் பெறும் வயதானவர்களும் வங்கிகளிலே நேரம் பார்க்காமல் காத்துக்கிடக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இணையத்தில் வெளியான ஒரு புகைப்படம் அனைவரையும் கலங்கை வைக்கும் வண்ணம் உள்ளது.

ஒரு வயதான பெண் மணி தனது 1000 ரூபாய் ஓய்வூதியத்தை பெற நீண்ட நேரம் காத்துக் கிடந்து பணமில்லாமல் தலையில் அடித்துக் கொண்டு தவிப்போடு வெளியேறுகிறார்.

இந்த புகைப்படத்தை தான் அனைவரும் சமூகவலைதளங்கில் வேதனையோடு பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments