கோடிக்கணக்கில் சுருட்டிய பிரபல நடிகை மீது குவியும் புகார்கள்

Report Print Jubilee Jubilee in இந்தியா

மோசடி வழக்கில் கைதான பிரபல மலையாள நடிகை தன்யா மேரி வர்கீஸ் மீது மேலும் பல புகார்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை தன்யா மேரி வர்கீஸ் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஜான் ஜேக்கப்பின் குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் நடிகை தன்யா இயக்குனராக உள்ளார்.

இந்த நிறுவனம் சார்பில் கடந்த 2011ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனி வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டித்தருவதாக தன்யாவும் அவரது கணவரும் விளம்பரம் செய்து பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து உள்ளனர்..

ஆனால் திட்டமிட்டபடி வீடுகள் கட்டிக்கொடுக்காததால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் பொலிசில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த பொலிசார் தலைமறைவாக இருந்த தன்யா மற்றும் அவரது கணவர் ஜான்ஜேக்கப், ஆகியோரை அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

இந்நிலையில் தன்யா, அவரது கணவர் மீது மேலும் பலர் பணமோசடி செய்துவிட்டதாக புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.

இதனால் அவர்களின் மோசடி ரூ.130 கோடிகளை தாண்டும் என்று பொலிசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments