சசிகலாவுக்கும், அஜித்துக்கும் போட்டி! யார் ஜெயிப்பார்கள்?

Report Print Raju Raju in இந்தியா

2016ஆம் வருடம் முடிந்து இன்னும் சில இரு வாரத்தில் 2017ஆம் வருடம் பிறக்க உள்ளது. இதனிடையில் காலண்டர் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சிவகாசி மாவட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது.

இதனிடையில் 2017 ஆம் வருட காலண்டர் தயாரிக்க அதிமுக சார்பில் அதிக ஆர்டர் வருகிறதாம். அதுவும் அதிமுக நிர்வாகிகள் சின்னம்மா என அழைக்கும் சசிகலாவின் புகைப்படத்தை காலண்டரில் அச்சடிக்கவே அதிக ஆர்டர் வருவதாக காலண்டர் அச்சகம் நடத்துபவர்கள் கூறியுள்ளனர்

அதே போல நடிகர்களில் அஜித்குமார் புகைப்படத்துடன் கூடிய காலண்டர் அச்சடிக்க அதிகளவில் ஆர்டர் வருவதாகவும் காலண்டர் அச்சடிக்கும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அதிமுகவில் அடுத்து அஜித் தான் என காற்று வாக்கில் பரவும் செய்திகள் மத்தியில் காலண்டர் அச்சிடுவதில் அஜீத் படத்துக்கும் சசிகலா படத்துக்கும் போட்டி நிலவுவது சுவாரசிய விடயமாக அமைந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments