லாட்ஜில் உல்லாசம்! நண்பருக்கும் விருந்தாக்க முயற்சி! காதலியை கொன்றது ஏன்? காதலன் வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவை சேர்ந்தவர் எத்திராஜ், இவரது மகள் நிவேதா.

எம்சிஏ பட்டதாரியான நிவேதா கடந்த 14ம் திகதி மாயமானார், இதனால் பதறிப்போன பெற்றோர்கள் எங்கு தேடியும் நிவேதாவை காணவில்லை, இதனையடுத்து மயிலாப்பூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மயிலாப்பூரில் தனியார் ஹொட்டல் ஒன்றில் பூட்டிய அறைக்குள் இளம்பெண் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தியதில் காணாமல் போன நிவேதா என்பதும் தெரியவந்தது.

உடல் முழுவதும் கீறல்களும், கழுத்தில் நெறித்த தடயமும் இருந்தது. இதனையடுத்து நிவேதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கேரளாவைச் சேர்ந்த ஹரீஷ் என்ற பெயரில் அறை புக் செய்யப்பட்டு இருந்ததும், அவருடன் நிவேதா வந்திருந்ததும் தெரியவந்தது.

யார் இந்த ஹரீஷ் என்று பொலிசார் விசாரித்ததில் மதுரை ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும், நிவேதா செல்போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் இவரை மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து பொலிசார் சுற்றி வளைத்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு, சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏ.சி.மெக்கானிக்காக வேலை பார்த்தேன், சமையல் வேலையும் செய்வேன்.

விடுமுறை தினத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தேன், அப்போது தான் நிவேதாவை சந்தித்தேன்.

பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம், என் பெயர் ஹரீஷ் என்றும், கேரளாவை சேர்ந்தவன் எனவும் கூறினேன்.

சில மாதங்கள் கழித்து எனக்கு கேரளாவில் வேலை கிடைத்தது, அங்கு என் நண்பர் சுபாஷ் நிவேதாவின் புகைப்படத்தை பார்த்து, அவளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என கூறினான்.

இதனையடுத்து நிவேதாவிடம் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி என் மனதில் எழுந்தது, என்னுடைய ஆசையை அவரிடம் தெரிவித்தேன்.

அவளும் சம்மதம் சொன்னாள், தொடர்ந்து மகாபலிபுரம் சென்று தனிமையில் இருக்கலாம் என திட்டமிட்டோம். பின்னர் பொலிசுக்கு பயந்து மயிலாப்பூர் லாட்ஜில் ரூம் எடுத்தோம்.

இருவரும் உல்லாசம் அனுபவித்தோம், என்னுடன் என் நண்பர் சுபாசும் வந்திருந்தார், அவரின் ஆசைக்கு இணங்க நிவேதா மறுத்தார்.

அவரை வலுக்கட்டாயப்படுத்திய போது கத்தி சத்தம் போட்டுவிட்டார் என்பதற்காக வாயை பொத்தினேன், கழுத்தையும் நெறித்தேன்.

சிறிது நேரத்தில் நிவேதா மயங்கிவிட்டார், அருகில் சென்று பார்த்த போது தான் அவர் இறந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரூமை காலி செய்து விட்டு நானும், என் நண்பனும் கிளம்பிவிட்டோம், பொலிசிலிருந்து தப்பிக்க திட்டமிட்டோம்.

ஆனால் நான் சிக்கிவிட்டேன், சுபாஷ் தப்பித்து விட்டான். நிவேதாவை கொலை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சுபாஷை தேடிவரும் பொலிசார் விரைவில் கைது செய்து விடுவோம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments